உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூன்றாண்டு பணிக்கு கிடைத்த அங்கீகாரம் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்

மூன்றாண்டு பணிக்கு கிடைத்த அங்கீகாரம் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்

விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதியின் வெற்றி மூன்றாண்டு மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.மேலும் அவர் கூறியதாவது: இண்டியா கூட்டணியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இது இண்டியா கூட்டணிக்கு மட்டும் அல்ல முதல்வர் ஸ்டாலினின் மூன்றாண்டு மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் தான். மக்கள் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளில் எங்களை ஆதரித்துள்ளனர்.இதற்கு முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்துள்ளார். ஓட்டு வித்தியாசம் என்பது அந்த தொகுதியில் உள்ள வேட்பாளரை பொருத்தும், தொகுதியை பொருத்தும் அமையும்.மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றி இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. விருதநகர் லோக்சபா தொகுதி மக்கள் மாணிக்கம் தாகூர் தங்களுக்காக பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டளித்துள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை