உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் சீரமைப்பு; அமைச்சர் சிவசங்கர் பேச்சு

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் சீரமைப்பு; அமைச்சர் சிவசங்கர் பேச்சு

விருதுநகர் : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஊழியர்களின் ஊதிய விகிதம் சீரமைக்கப்பட்டுள்ளது என விருதுநகரில் புதிய அரசு பஸ்கள் துவக்க விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.அவர் மேலும் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பணிமனைகளில் அரசு பஸ்களின் மொத்த எண்ணிக்கை 449, வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418, பணியாளர்களின் எண்ணிக்கை 2449. ஒரு மாதத்திற்கு 60.45 லட்சம் கி.மீ., இயக்க நிர்ணயிக்கப்பட்டு, 104. 80 லட்சம் பயணிகள் பயன் அடைகின்றனர்.நடப்பாண்டு மார்ச் 4 முதல் படிப்படியாக 36 அரசு பஸ்கள்புதிதாக இயக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முதல் அருப்புக்கோட்டை 5, விருதுநகர் 2, சிவகாசி 8, சாத்துார் 2, காரியாப்பட்டி 1, ராஜபாளையம் 9, ஸ்ரீவில்லிப்புத்துார் 2 என மொத்தம் 29 அரசு பஸ்களின் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.பல மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஊழியர்களின் ஊதிய விகிதம் சீரமைக்கப்பட்டுள்ளது.தற்போது நல்ல நிலையில் அரசு போக்குவரத்து கழகம் இயங்க முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகள் மட்டுமே காரணம். இந்தியாவில் எந்த மாநில அரசிடமும் இல்லாத அளவிற்கு தமிழக அரசிடம் 20 ஆயிரம் பஸ்கள் உள்ளது. எல்லா கிராமங்களுக்கும் பஸ் வசதி, நேர முறைப்படி இயங்குகின்ற பஸ்கள் கொண்ட ஒரே மாநிலம் தமிழகம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை