உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி - நாரணாபுரம் சேதமான ரோட்டினால் வாகன ஓட்டிகள் அவதி

சிவகாசி - நாரணாபுரம் சேதமான ரோட்டினால் வாகன ஓட்டிகள் அவதி

சிவகாசி: சிவகாசி பைபாஸ் ரோட்டில் இருந்து நாரணாபுரம் செல்லும் சேதமடைந்த ரோட்டால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். சிவகாசி பைபாஸ் விலக்கிலிருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் ரோட்டில் பள்ளம் இருப்பது தெரியாததால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். கனரக வாகனங்கள் தட்டு தடுமாறியே செல்கின்றன. சேதமடைந்த இந்த ரோட்டில் அவ்வப்போது ஒட்டு போடும் பணி நடக்கிறது. இதனால் மீண்டும் கற்கள் பெயர்ந்து ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே நாரணாபுரம் செல்லும் ரோட்டினை முழுமையாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி