உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீட் தேர்வு: 7 மையங்களில் 3462 மாணவர்கள் பங்கேற்பு

நீட் தேர்வு: 7 மையங்களில் 3462 மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள்(மே 5) நீட் தேர்வில் 7 மையங்களில் 3462 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.மாவட்டத்தில் மே 5ல் நீட் தேர்வு நடக்கிறது. இதில் கே.வி.எஸ்., இ.எம்.எஸ்., பள்ளி மையத்தில் 696 மாணவர்களும், பி.சிதம்பரம் நாடார் ஆங்கிலப்பள்ளியில் 576, அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் 504, ராம்கோ சி.பி.எஸ்.இ., பள்ளியில் 480, ஏ.ஏ.ஏ., இன்டர்நேஷனல் கல்லுாரி 384, ராஜபாளையம் ஆறுமுகம் பழனிக்குரு பள்ளியில் 216 , ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 606 மாணவர்கள் என 3462 மாணவர்கள் 7 மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.379 அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 433 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் பயிற்சி மையங்களில் படித்த மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். இதற்காக பலமுறை ஆயத்த தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ளனர். தேர்வு விதிமுறைகள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை