உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் புதிய தார் ரோடு அமைப்பு

விருதுநகரில் புதிய தார் ரோடு அமைப்பு

விருதுநகர்: விருதுநகர் சவுந்தர பாண்டியன் ரோட்டில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிய தார் ரோடு அமைக்கப்பட்டது.விருதுநகர் - அருப்புக்கோட்டை மேம்பாலம் ஏறி இறங்கியதும் உள்ள சவுந்தரபாண்டியன் ரோடு சேதமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இந்த ரோட்டில் புதிய தார் ரோடு அமைப்பதற்காக லோக்சபா தேர்தலுக்கு முன்பே பணிகள் துவங்கப்பட்டது.ஆனால் ஒரு மாதமாகியும் புதிய ரோடு அமைப்பதற்கான பணிகள் நடை பெறாமல் இருந்தது. இவ்வழியாக பங்குனிப்பொங்கல் விழாவின் போது தீ சட்டி எடுத்து சென்ற பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து தினமலர் நாளிதழில் ஏப்.22ல் செய்தி வெளியானது. இதனையடுத்து சவுந்தரபாண்டியன் ரோட்டில் புதிய தார் ரோடு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்