உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக்கிரமிப்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோடு--

ஆக்கிரமிப்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோடு--

ராஜபாளையம், : ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய காமராஜர் நகர் மெயின் ரோட்டில் பஸ் போக்குவரத்து உள்ள பகுதியில் இரண்டு பக்கமும் ரோட்டோர மீன் கடைகளின் ஆக்கிரமிப்பால் தினமும் விபத்து அபாயம் இருந்து வருவதை நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.1.32 லட்சம் மக்கள் தொகையுடன் 42 வார்டுகளை கொண்ட ராஜபாளையம் நகராட்சிஅமைந்துள்ளது.இங்கு மதுரையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கான தேசிய நெடுஞ்சாலை இருந்துவருகிறது.நகர் பகுதி நடுவே ஏற்கனவே இருந்து வந்த பழைய பஸ் ஸ்டாண்ட் நெரிசல் காரணமாக சங்கரன்கோவில் ரோட்டில் மாற்றி அமைக்கப்பட்டு செயல்படுகிறது.நெரிசலை தவிர்க்கும் விதமாக பழையபஸ் ஸ்டாண்ட் செல்லும்வாகனங்கள் டி.பி., மில்ஸ் ரோடு வழியே காமராஜர் நகர் மெயின் ரோடு வந்து பழைய பஸ் ஸ்டாண்ட் அடையும்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் காமராஜர் நகர் மெயின் ரோட்டில் இரண்டு பக்கமும் ரோட்டோர மீன் கடைகளை வியாபாரிகள்ஆக்கிரமித்து வைத்துள்ளதால் போக்குவரத்துபாதிக்கப்படுவதுடன் எதிர்வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் விபத்துக்களை சந்தித்து வருகின்றன.அரசியல் காரணங்களுக்காக வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம் பொது மக்களின் தடையற்ற போக்குவரத்தை மனதில் கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்து தீர்வு காண வேண்டும் என காமராஜர் நகர் குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்