உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேம்பால மழைநீர் வாறுகால் அடைப்பு மழைக்காலத்தில் சிரமப்படும் மக்கள்

மேம்பால மழைநீர் வாறுகால் அடைப்பு மழைக்காலத்தில் சிரமப்படும் மக்கள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் மேம்பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் வெளியேறும் வாறுகால் பராமரிப்பு இன்றி அடைபட்டுள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளது. அருப்புக்கோட்டை வழியாக மதுரை -- தூத்துக்குடி செல்லும் 4 வழி ரோட்டில் காந்தி நகர் பகுதியில் 2 மேம்பாலங்கள் உள்ளன. இவற்றின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும். பாலத்தின்கீழ் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. மழைக்காலத்தில் பாலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க தண்ணீர் வெளியேறும் வகையில் ஆங்காங்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் வெளியேறும் படி வாறுகால்களும் உள்ளன. இவை பராமரிப்பு இன்றி உள்ளதால் செடிகள் முட்புதர்கள் வளர்ந்து உள்ளன. மழை பெய்கின்ற பொழுது வாறுகாலில் தண்ணீர் வெளியேற முடியாமல் அடை பட்டு போய் உள்ளன. இதனால் தண்ணீர் தேங்கி சர்வீஸ் ரோடு சேதம் ஆகும் அபாயம் உள்ளது. மேலும், பாலத்தின் பக்கவாட்டு சுவற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. நெடுஞ்சாலைதுறையினர் பால பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது இல்லை. மழைக்காலத்தில்பால பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வாறுகாலில் வெளியேறும் வகையில் செடிகள் முட்புதர்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ