உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு சீரமைக்க கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ரோடு சீரமைக்க கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் கோபால் நகரில் சாலையை சீரமைக்க கோரி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி கோபால் நகர் பகுதியில் 3 மாதங்களுக்கு முன் ரோடு அமைப்பதற்காக ஜல்லி கற்கள் போடப்பட்டது. அதன் பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தெருவிளக்கு அமைக்காததால் இரவில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். பாதியில் நிறுத்தப்பட்ட ரோடு பணிகளை முடிக்க வேண்டும். தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கொடுத்த பின் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை