உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வருமான வரி தாக்கல் செய்ய மக்கள் முன்வர வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் பேச்சு

வருமான வரி தாக்கல் செய்ய மக்கள் முன்வர வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் பேச்சு

விருதுநகர்: வருமான வரி தாக்கல் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பேசினர்.விருதுநகரில் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வருமான வரித்துறை தலைமை கமிஷனர் சஞ்சய் ராய் தலைமை வகித்து பேசுகையில், ''வரி செலுத்துவோர் தங்களுக்கான ஆண்டுத் தகவல் அறிக்கை தரவுகளை சரிபார்த்துக் கொள்வது அவசியம். வரி செலுத்துவதை கடமையாக மட்டுமல்லாமல் பெருமையாகவும் நினைக்க வேண்டும்'' என்றார்.முதன்மை கமிஷனர் வசந்தன் பேசியதாவது: நம் நாட்டில் 61 கோடி பேருக்கு பான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 2023-- 24ம் நிதியாண்டில், 8.18 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். கடந்த நிதியாண்டில் வருமான வரி வசூல் அகில இந்திய அளவில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் மதுரை மண்டலத்தில் ஒரு சதவீதம் மட்டுமே வரி வளர்ச்சி ஏற்பட்டது. எனவே, வரிவசூலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் 11.50 லட்சம் பேர் பான் அட்டைகள் வைத்துள்ளனர். 1.20 லட்சம் பேர் மட்டுமே வருமான வரிப் படிவம் தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம் மட்டுமே. 90 சதவீதம் பேர் தாக்கல் செய்யவில்லை. நாடு முழுவதும் தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீத படிவங்கள் மக்கள் மீதான நம்பிக்கை காரணமாக மதிப்பீடு செய்யப்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே மக்கள் தாமாக முன்வந்து முறையாக வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.சம்பள ஊதியர்கள், தொழில் புரிவோருக்கான வருமான வரி தாக்கல் செய்யும் சட்டப் பிரிவுகள், சலுகைகள், வருமான வரிச் சட்டத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து கூடுதல் கமிஷனர் சந்திரசேகரன் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்