உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்

சிவகாசி: சிவகாசியில் பல்வேறு ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் இல்லாததால் ஓட்டு போட வந்த மக்கள் ஓட்டளிக்க முடியாமல் அதிருப்தியில் சென்றனர். சிவகாசியில் ஓட்டு போட வந்த பலருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் இல்லாததால் ஓட்டுப் பதிவு செய்ய முடியவில்லை. பாறைப்பட்டியில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட ஒருவர் ஓட்டளிக்காமல் செல்ல மாட்டேன் என மாலை வரை ஓட்டுச் சாவடியிலேயே காத்திருந்தார்.பாண்டிச்செல்வி, முண்டகன் தெரு, ஓட்டுப் பதிவு செய்வதற்காக ஓட்டுச் சாவடிக்கு காலை 8:00 மணிக்கு வந்தேன். ஆனால் இங்கு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. ஏற்கனவே நடந்து முடிந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் ஓட்டுப்பதிவு செய்துள்ளேன். ஆனால் இப்பொழுது பெயர் நீக்கம் செய்துள்ளனர். இதே வாக்காளர் பட்டியலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஆனால் 15 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் எனது பெயர் இல்லை. மூன்று மணி நேரமாக காத்திருக்கின்றேன். விளக்கம் கேட்டும் உரிய பதில் இல்லை, என்றார்.

ஒரே குடும்பத்தில் 90 பேர் ஓட்டளிப்பு

சிவகாசி அருகே பூசாரிபட்டியில் பெருமாள்சாமியின் குடும்பத்தில் 150 பேர் கூட்டுக்குடும்பமாக தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு இக்குடும்பத்தில் ஓட்டுரிமை பெற்ற 90 பேர் மொத்தமாக டிராக்டர், பைக் உள்ளிட்ட வாகனங்களில் மம்சாபுரம் அரசு உயர்நிலை பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் தங்களது ஓட்டுக்களை செலுத்தினர். இதேபோல் இக்கிராமத்தில் கூட்டுக்குடும்பமாக உள்ள சக்கமுத்து குடும்பத்தை சேர்ந்த 55 பேரும், வெடிமுத்து குடும்பத்தை சேர்ந்த 40 பேரும் ஒரே நேரத்தில் சென்று ஓட்டளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ