உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு சார்பு பெட்ரோல் பங்க்கில் பணிபுரிவோருக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தத்தில் நீடிக்கும் சிக்கல் 

அரசு சார்பு பெட்ரோல் பங்க்கில் பணிபுரிவோருக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தத்தில் நீடிக்கும் சிக்கல் 

விருதுநகர்: விருதுநகரில் டான்பெட்டின் அரசு சார்புபெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்வதில் சிக்கல் நீடிப்பதால் அந்த ஊழியர்கள் பொருளாதார ரீதியாகசிரமப்படுகின்றனர்.விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை அருகே தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் எனும் டான்பெட்டின் அரசு சார்பு பெட்ரோல் பங்க் செயல்படுகிறது. இதில் 12ஊழியர்கள் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் போடும் பணி செய்கின்றனர். இவர்கள் சூழற்சி முறையில் வேலை செய்கின்றனர்.இந்நிலையில் இவர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., சரிவர பிடித்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 ஆண்டுகளாக வேலை செய்தோருக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ., பணம் சரிவர பிடிக்கப்படாமல் உள்ளது. ஊழியர்கள் தங்கள் மருத்துவ, அவசர தேவைக்கு பி.எப்., கணக்கில் பணம் எடுக்க முற்பட்டால் பணம் குறைவாக உள்ளதாகவே காட்டுவதாக புலம்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு மாதமும் பி.எப்., இ.எஸ்.ஐ., பணம் பிடித்தம் போக தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.இது குறித்து டான்பெட் மண்டல மேலாளர் பொன்னுச்சாமி கூறியதாவது: ஒப்பந்த நிறுவனத்திடம் பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம் தொடர்பான அறிக்கை கேட்டுள்ளேன். அது வந்ததும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.அரசு சார்புடைய இடங்களில் அவுட்சோர்சிங், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இந்த சிக்கலை சந்திக்கின்றனர். ஒப்பந்தத்தில் பணிபுரியும் ரயில்வே துப்புரவு ஊழியர்கள், நகராட்சி துப்புரவு ஊழியர்கள், மருத்துவமனை துப்புரவு ஊழியர்கள், அடிப்படை பணியாளர்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இவர்களை மேலாண்மை செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் மறைமுகமாக சுரண்டுகின்றனர். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறைப்படி பி.எப்., இ.எஸ்.ஐ., செய்வதை உறுதி செய்ய குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். முடிந்தால் ஒப்பந்த ஊழியர்களுக்கென தனியாக குறைதீர் கூட்டம் வைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ