உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி கிருதுமால் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமிப்பு

சிவகாசி கிருதுமால் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமிப்பு

சிவகாசி : சிவகாசி கிழக்கு மயான சாலை வழியாக செல்லும் கிருதுமால் ஓடையில் ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி நகரின் மையப் பகுதியில் செல்லும் கிருதுமால் ஓடை இரண்டு கி.மீ., நீளமுள்ளது. இந்த ஓடை சிறுகுளம் கண்மாயிலிருந்து காமராஜர் சிலை, முஸ்லிம் ஓடைத்தெரு, மருதுபாண்டியர் தெரு, அம்பேத்கர் மணிமண்டபம், டாக்ஸி ஸ்டாண்ட், காந்தி ரோடு கிழக்கு மயான சாலை வழியாக நகரை விட்டு வெளியேறி மீனம்பட்டி கண்மாய் செல்கிறது.அங்கிருந்து அர்ஜூனா நதியில் கலக்கும். இந்நிலையில் கிருதுமால் ஓடையில் பெரும்பான்மையான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மயான சாலை வழியாக செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டுள்ளது.இதனை அகற்றாததால் கழிவு நீர், மழை நீர் வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே ஓடையில் ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ