| ADDED : ஜூலை 07, 2024 01:38 AM
ஒடிசா தொழிலாளர்கள் தீக்காயம்விருதுநகர்: அருப்புக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி 64. இவர் நமச்சிவாயபுரம் ரோட்டில் ஜூலை 3 காலை 9:30 மணிக்கு புதிய சிரட்டை கரி தயாரிப்பு ஆலையை இயக்க பர்னரை சூடாக்க பெட்ரோல் ஊற்றி லைட்டரில் தீப்பற்ற வைக்க முயன்ற போது ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மனோஜ் குமார் 36, பிரதீப் குமார் 23, காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.அரிவாள் வீடியோவாலிபர் மீது வழக்குவிருதுநகர்: செங்கோட்டையைச் சேர்ந்தவர் சூர்யா 23. திருநெல்வேலியில் தீபக்ராஜா கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பிற சமூகத்தினரை அச்சுறுத்தும் விதத்தில் சூர்யா அரிவாளுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இவர் மீது ஆமத்துார் எஸ்.ஐ.,செந்தில் குமார் வழக்கு பதிந்தார்.செயின் மாயம்விருதுநகர்: மூன்றாவது தெரு முல்லை நகரைச் சேர்ந்தவர் ஆசிரியர் முத்துக்காமாட்சி 49. இவர் ஜூன் 27 ல் விருதுநகர் இந்தியன் வங்கியில் அடகு வைத்த 4 பவுன் தங்க செயினை மீட்டு கைப்பையில் வைத்து சாத்துார் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்க கைப்பையை பார்த்த போது செயின் காணாமல் போனது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுநரிக்குடி: உமையன் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். மானாசாலையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது டூவீலரை இரவு கடையில் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது டூவீலரை காணவில்லை. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது காலை 5 மணிக்கு டூவீலரில் வந்த இருவர் டூவீலரை திருடி சென்றது தெரிந்தது. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைவிருதுநகர்: கள்ளிக்குடி அருகே மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மும்மூர்த்தி 27. இவருக்கும் மனைவி காளீஸ்வரிக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டதால் விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மும்மூர்த்தி வந்தார். ஜூலை 5 மதியம் 3:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.சாத்துார்: அமீர்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 40. ஆட்டோ டிரைவர். பக்கவாதத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டமுடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஜூலை 5 வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.