மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
9 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
9 hour(s) ago
சிறுவன் மர்மச்சாவுசாத்துார்: சாத்துார் புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் செல்வக்குமார், 18. வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆக., 4ல் மதியம் 3:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார் .நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள வீராச்சாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக மிதந்தார். தீயனைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் பலிசாத்துார்: சாத்துார் ஆர்.சி.வடக்குத்தெருவை சேர்ந்தவர் இன்னாசியார், 70. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நான்கு வழிச்சாலை கிழக்கு சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துர்ர் போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளியில் திருட்டுஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங் குளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பள்ளியின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்து 900,பரிசு பொருட்கள், எடை பார்க்கும் இயந்திரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர்.அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago