உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

தளவாய்புரம் : தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து மதுரையில் தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறிகளும் இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1500 க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற நிலையில் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் காலாவதியாகி கூலி உயர்வு வழங்கவில்லை.இதனை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கத்தினரும் விசைத்தறி உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை செவ்வாய்க்கிழமை மதுரையில் வைத்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை