| ADDED : ஜூன் 15, 2024 07:02 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பள்ளி ரோட்டில் பள்ளமாக இருப்பதால் மாணவர்கள் விழுந்து செல்கின்றனர்.அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் தெப்பம் வழியாக செல்லும் எஸ்.பி.கே., பள்ளி ரோட்டில் கான்வென்ட்கள், துவக்க பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள், கல்லூரி, திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ரோடு வழியாக வந்து செல்வர். தெப்பத்திற்கு அருகில் உள்ள ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து, அதை சரி செய்த பின் அரைகுறையாக குழியை மூடியதால், வாகனங்கள் வந்து சென்று பெரிய பள்ளமாக மாறி விட்டது. இதனால், பள்ளிக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் கிடங்கில் விழுந்து செல்கின்றனர். வாகனங்களும் சிரமப்பட்டு தான் செல்கிறது. மீண்டும் குழாய் உடைந்து குடிநீரும் வெளியேறுகிறது. உடைந்த குழாயையும், கிடங்கையும் சரி செய்ய நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.