உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி அவதி

ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி அவதி

சாத்துார், : ஏழாயிரம்பண்ணை ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.ஏழாயிரம் பண்ணை ராஜிவ் காந்தி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் தீப்பெட்டி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. நகர் உருவாகி 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தெருக்களில் முறையான வாறுகால் ரோடு வசதியில்லை.வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவு நீரில் கால் வைத்து நடந்தே வீடுகளுக்கு செல்லும் நிலையுள்ளது. கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாது ராஜிவ்காந்தி நகரில் ரோடு, சாக்கடை வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை