உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 46வது வார்டு புதுத் தெருவில் ரோட்டை ஆக்கிரமித்து இறைச்சிக்கடை வைக்கப்பட்டு இருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு சுகாதாரத் கேடும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் பகவதி பெருமாள் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் சித்திக், மேற்பார்வையாளர்கள் முத்துராஜ், குருசாமி ஆகியோர் ஆக்கிரமித்து இருந்த இறைச்சிக் கடையை அகற்றினர். மேலும் கடை உரிமையாளரிடம் மீண்டும் ஆக்கிரமித்து இறைச்சி கடை வைக்க மாட்டேன் என அப்பகுதி மக்கள் முன்னிலையில் எழுதி வாங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்