உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜகோபுரத்தில் மரக்கன்றுகள் அகற்றம்

ராஜகோபுரத்தில் மரக்கன்றுகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் பல்வேறு இடங்களில் வளர்ந்த மரக்கன்றுகளை கோயில் நிர்வாகம் அகற்றியது.தமிழக அரசின் முத்திரை சின்னமான இக்கோவில் ராஜகோபுரம் 196 அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்தில் நிலைப்பகுதிகளில் சிறிய செடிகள் முதல் அரச மர கன்றுகள் வரை பல்வேறு இடங்களில் வளர்ந்து காணப்பட்டது. இச்செடிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் கோபுரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயமுள்ளது என்பது குறித்து ஜூலை 3ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புடன் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகள், மரக்கன்றுகளை தொழிலாளர்கள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை