உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த ரோடு குடியிருப்போர் அவதி

சேதமடைந்த ரோடு குடியிருப்போர் அவதி

சிவகாசி : சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி என்.ஜி.ஓ., காலனியில் பெரும்பான்மையான தெருக்களில் ரோடு சேதம் அடைந்திருப்பதால் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி என்.ஜி.ஓ., காலனியில் 10கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரோடு போடப்பட்டது. தற்போது அனைத்து தெருக்களிலும் ரோடு குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி விடுகின்றது. மேலும் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றது.தவிர வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து என்.ஜி.ஓ., காலனி செல்லும் மெயின் ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் உடனடியாக சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை