உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு சீர் செய்யும் பணி தொடக்கம்

ரோடு சீர் செய்யும் பணி தொடக்கம்

ராஜபாளையம் : அயோத்திராம் நகரில் குடியிருப்பு அருகே பிளாட்டுகளை சமன்படுத்த டாரஸ் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மண் கொண்டு சென்றதால் எடை தாளாமல் ரோடு சேதம் அடைந்தது. 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைக்க ரோட்டை சேதப்படுத்தியதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் 3 டாரஸ் லாரி இரண்டு மண் அள்ளும் இயந்திரங்களை சிறை பிடித்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக தார் சாலையின் பள்ளங்களை சமன்படுத்தும் பணி தொடங்கியது. சில நாட்களில் பராமரிப்பு பணிகள் முடித்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதால் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை