உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் என்.ஜி.ஓ.காலனியில் கரடு முரடான ரோடால் அவதி

சாத்துார் என்.ஜி.ஓ.காலனியில் கரடு முரடான ரோடால் அவதி

சாத்தூர் : சாத்துார் என் .ஜி. ஓ. காலனி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டினால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வெங்கடாசலபுரம் ஊராட்சிக்குட்பட்ட என். ஜி. ஓ. காலனியில் ரோடுகள் முறையான பராமரிப்பு இல்லாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மெயின் தெருவில் மட்டுமே தார் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற தெருக்களில் சிமெண்ட் சாலைகள் போட்டு பல வருடங்கள் ஆனதால் தற்போது சேதம் அடைந்து மண் ரோடாக மாறிவிட்டது.குறிப்பாக என். ஜி. ஓ. காலனி மத்தியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிறியமழை பெய்தாலும் பள்ளங்களில் தண்ணீர் குளம் போல் தேங்குவதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.எனவே போர்க்கால அடிப்படையில் என். ஜி. ஓ. காலனியில் புதிய தார்ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்