உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடிந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் பாராமுகம் காட்டும் பள்ளி கல்வி துறை

இடிந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் பாராமுகம் காட்டும் பள்ளி கல்வி துறை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து பல மாதங்களாகியும் கட்டாமல் பள்ளி கல்வித்துறை பாராமுகம் காட்டி வருகிறது.அருப்புக்கோட்டை எஸ்.டி.ஆர்.என்., அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை உள்ளது. இதில் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம், சுக்கிலநத்தம் உட்பட பகுதிகளில் இருந்து மாணவர்கள் படிக்க வருகின்றனர். தற்போது 198 மாணவர்கள் படிக்கின்றனர்.இங்குள்ள பள்ளியில் போதுமான வகுப்பறைகள், உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லை. கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடக்கிறது . நான்கு மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. இதை புதியதாக கட்டி தருவதில் பள்ளி கல்வித்துறை மெத்தனம் காட்டுகிறது. உடனடியாக பள்ளியின் சுற்று சுவரை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி