உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி கட்டளைப்பட்டி பாலத்தில் இல்லை தடுப்புச்சுவர்

சிவகாசி கட்டளைப்பட்டி பாலத்தில் இல்லை தடுப்புச்சுவர்

சிவகாசி, : சிவகாசி கட்டளைப்பட்டி செல்லும் ரோட்டில்பெரியகுளம் கண்மாய் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சிவகாசி இரட்டைப் பாலம் விளாம்பட்டி ரோட்டில் இருந்து கட்டளைப்பட்டிக்கு செல்லும் ரோட்டில் உள்ள பெரியகுளம் கண்மயில் 100 மீட்டர் துாரத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுஉள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. குறுகிய பாலம் என்பதால் சிறிது அசந்தாலும் பாலத்தில் செல்லும் வாகனங்கள் கண்மாய்க்குள் விழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாலத்தில் இருபுறமும் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் வருகின்ற வாகனங்கள் அச்சத்துடனே வர வேண்டியுள்ளது. நடந்து, சைக்கிளில் செல்பவர்களும் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. எனவே பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி