| ADDED : ஏப் 27, 2024 03:57 AM
சிவகாசி: சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.இக் கோயிலில் 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 2023 ஏப்.24ல் பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.22ல் யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கி, தினமும் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. ஏப். 23ல் முதல் கால யாக சாலை பூஜை, மறுநாள் இரண்டாம் கால, 3ம் கால யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் நான்கு, ஐந்து, ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்ததுதினமும் யாகசாலை பூஜை நேரங்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் மண்டக படிகாரர்கள், சிவகாசி வாழ் அனைத்து சமுதாய பெருமக்கள், சிவ பக்தர்கள் செய்தனர்.