உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 63 போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு

63 போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க கால தாமதமானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து 63 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு போலீஸ் துறையில் 1999ல் இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படை, போலீஸ் ஸ்டேஷன்களில் ஏட்டுக்களாக பணியாற்றுபவர்கள் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்காக காத்திருந்தனர். இவர்களுக்கு ஜூன் 1 ல் வழங்க வேண்டிய பதவி உயர்வு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தும் வழங்கப்படாமல் கால தாமதமானது. இது குறித்து தினமலர் நாளிதழில் ஜூன் 12ல் செய்தி வெளியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 63 ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி மதுரை டி.ஐ.ஜி., ரம்யா பாரதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி