உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்கள் 47 விடுதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் 47 விடுதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்: மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 47 விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது வருகிறது.இது குறித்து கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: இதில் பள்ளி விடுதிகளில் 4 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மாணவர்கள் சேர தகுதியானர்வர்கள்.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல விடுதிகளில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்க்கப்படுவர்.பெற்றோர், பாதுகாவர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீ., மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு துார விதி கிடையாது. தகுதியுடையவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 1 க்குள்ளும் கல்லுாரி விடுதிகளில் விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் ஜூலை 31 க்குள்ளும் சமர்பிக்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி