| ADDED : ஜூலை 27, 2024 06:18 AM
சாத்துார் : சாத்துார் நகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட வெம்பக்கோட்டை ரோட்டில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், குண்டு குழியுமான ரோட்டினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.முறையான ரோடு, வாறுகால் வசதியில்லை. வெம்பக்கோட்டை ரோடு குறுக்கு சந்திலும், நம்மாழ்வார் காம்பவுண்ட் பகுதியிலும் வாறுகாலில் கழிவுநீர் செல்லவில்லை. நம்மாழ்வார் காம்பவுண்ட், மெயின் வாறுகாலில் இருந்து சிறிய வாறுகாலுக்கு கழிவுநீர் புகுந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. கழிவுநீர் செல்வதற்கு முறையான வசதி இல்லாததால் வாறுகால் கட்டப்பட்டும் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.சிலர் வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டாமல் நேரடியாக மனிதக்கழிவை வாறுகாலில் விட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மதுரை பஸ் நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த பொது சுகாதார வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதை செயல்பாட்டில் கொண்டுவர இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.துர்நாற்றத்தால் அவதிவெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் வாறுகால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கடைகாரர்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள்கோபிநாத், சாத்துார்.குடிநீரில் சாக்கடை2நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது.இந்த தண்ணீரும் சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுகிறது.பல முறை நகராட்சியில் புகார் செய்தும் குடிநீரில் கலந்து வரும் சாக்கடையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.சர்மிளா, குடும்பத் தலைவி.சாக்கடையில் குப்பைசாக்கடை தள்ள வரும் ஆட்கள் குப்பை அகற்றிவிட்டு ரோடு ஓரத்தில் வைக்கின்றனர். இது மீண்டும் சாக்கடைக்குள்விழுந்து சாக்கடை முழுவதும் குப்பை பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கிறது. கழிவு நீர் செல்லவில்லை. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவா, குடும்பத் தலைவர் .கொசுக்கடியால் அவதிரோட்டின் இருபுறமும் சாக்கடை செல்லாமல் தேங்கி நிற்பதால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது இரவில் மட்டுமின்றி பகலிலும் கொசு கடிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி மக்கள் தவிக்கும் நிலை உள்ளது கொசு மருந்து அடிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அருள்வேந்தன், சாத்துார்.(சார். படம். தனி தனி பைலாக அனுப்புகிறேன்.)