உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பசுந்தாள் உர விதைகள் வழங்கல்

பசுந்தாள் உர விதைகள் வழங்கல்

விருதுநகர்: விருதுநகரில் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட்டன.வேளாண்துறை மூலம் 10 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகளான தக்கைப்பூண்டு விதைகளையும், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறையின் மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.1200 மானிய விலையிலான பழசெடி தொகுப்புகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.மண்வளத்தை காக்க உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப் பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். வேளாண் இணை இயக்குனர் விஜயா, நேர்முக உதவியாளர் நாச்சியார்அம்மாள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ