உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கன்னிச்சேரியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

கன்னிச்சேரியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் அருகே கன்னிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை ராம்கோ சிமென்ட் நிறுவனம் வழங்கியது.விருதுநகர் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ் கன்னிச்சேரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிசியோதெரபி மிஷின், எல்.இ.டி., மின் விளக்குகள் உட்பட ரூ. 3 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை நிறுவன உதவி துணைத் தலைவர் லட்சுமணன் (உற்பத்தி), கணக்கு, நிர்வாகம் உதவி துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்து வழங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கியராஜ், சுகாதார ஆய்வாளர் துரை, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, ராம்கோ சிமெண்ட்ஸ் துணை பொது மேலாளர் ராமச்சந்திரன், மருத்துவர் விஜய்ஆனந்த் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை