உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. உட்பட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விருதுநகர் சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. உட்பட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விருதுநகர் சிறையில் அடைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: காரியாப்பட்டியில் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ. செல்வராஜ், 48, உடந்தையாக இருந்த டெய்லர் மோகன்தாஸ், 52, ஆகியோரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இருவரும் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.காரியாபட்டி கீழ உப்பிலிகுண்டுவை சேர்ந்தவர் நக்கீரன், 35, இவரின் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க கடம்பன் குளம் வி.ஏ.ஓ. செல்வராஜ், ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.நேற்று முன்தினம் காலை அவரது அலுவலகத்தில் வைத்து நக்கீரன், ரூ. 25 ஆயிரத்தை கொடுத்த போது அவரது நண்பர் டெய்லர் மோகன்தாசிடம் கொடுக்க கூறினார். மோகன்தாஸ் பணத்தை வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.பிடிபட்ட இருவரும் நேற்று முன்தினம் இரவில் ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை