உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எரிச்சநத்தம் கண்மாய் கரையில் குப்பைமண்வளம் பாதிக்கும் அபாயம்

எரிச்சநத்தம் கண்மாய் கரையில் குப்பைமண்வளம் பாதிக்கும் அபாயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே எரிச்சநத்தம் கண்மாய் கரைபகுதியில் குப்பையை கொட்டி கிடங்காக மாற்றி வருவதால் நீர், மண்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எரிச்சநத்தம் பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை துாய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. எரிச்சநத்தம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் கண்மாயின் நீர் கொள்ளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பையை கண்மாய் கரைப்பகுதியில் மக்கள் கொட்டி வருகின்றனர். இதனால் மண், நீர் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் சில நாட்களாக துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரிக்க வருவதில்லை. மேலும் ஊராட்சி தலைவரிடம் தெரிவித்தும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் கரைப்பகுதி குப்பை கிடங்காக மாறியுள்ளது. திருமணம், உணவகங்களில் சேரும் குப்பையை கூட இங்கு வந்து கொட்டுகின்றனர்.இதன் அருகே வசிப்பவர்கள் துார்நாற்றத்திற்கு மத்தியில் வாழ வேண்டியுள்ளது. மேலும் குழந்தைகள், பெரியோர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே எரிச்சநத்தத்தில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பையை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை