உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் குறுக்குத்தெருவில் ரோடு வசதியின்றி அவதி

சாத்துார் குறுக்குத்தெருவில் ரோடு வசதியின்றி அவதி

சாத்துார்: சாத்துார் பழைய டிரங்க் ரோடு நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் ரோட்டில் உள்ள குறுக்கு தெருவில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. செடிகள் முளைத்தும் புதர் மண்டியும் உள்ளது. மேலும் இந்த தெருவில் உள்ள வீடுகளில் கட்டுமான பணிக்காக கொண்டு வந்து கொட்டப்பட்ட மணலும் கருங்கற்களும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது.டூவீலரில் மட்டுமின்றி நடந்து வீடுகளுக்கு செல்லுபவர்களும் மிகுந்தசிரமத்திற்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது. சாத்துாரில் பெரும்பாலான தெருக்களில் பேவர் பிளாக் ரோடு மற்றும் தார் ரோடு அமைக்கப்பட்டு விட்ட நிலையில் இந்த தெருவை மட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாகமக்கள் புகார் கூறுகின்றனர்.இனியும் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாது ஓல்டு டிரங் ரோடு குறுக்கு தெருவில் விரைந்து ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி