உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருக்கல்யாண உற்ஸவம்

திருக்கல்யாண உற்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.நேற்று முன்தினம் காலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து இரவு 7:00 மணிக்கு மேல் வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கல்யாணத்தை பட்டர்கள் ரகு , ரமேஷ் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து மணிகண்டன் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் நேற்று முதல் நித்திய மண்டல பூஜை துவங்கியது. ஜூலை 19 ல் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி