உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலை போர்மேன்கள் பயிற்சி

பட்டாசு ஆலை போர்மேன்கள் பயிற்சி

சிவகாசி; சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி செய்திக் குறிப்பு: சிவகாசி அருகே ஆனையூரில் உள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஒரு வார கால பாதுகாப்பு பயிற்சி வகுப்பு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. மார்ச் 3 முதல் மார்ச் 7, மார்ச் 10 முதல் மார்ச் 14, மார்ச் 17 முதல் மார்ச் 21 வரை பாதுகாப்பு பயிற்சி மையத்தில் காலை 10:15 மணி முதல் மாலை 5:00மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், சூப்பர்வைசர்கள் மேலும் முதல் முறை கடிதம் அனுப்பியும் பயிற்சி பெறாத போர்மேன்கள், சூப்பர்வைசர்கள் ரூ. 5000 வரை ஓலை செலுத்தி பயிற்சிக்கு வர வேண்டும். பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், சூப்பர்வைசர்கள், கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி மாணவர்கள், இதே துறையில் படித்து முடித்த மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ