| ADDED : ஜூன் 27, 2024 11:54 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட கனரக வாகனங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, ஜே.சி.பி., ஆட்டோ போன்ற கனரக வாகனங்கள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அவ்வழியாக எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது விபத்து அபாயமும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது.எனவே, இத்தகைய வாகனங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஜூன் 20ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வாகனங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் வாகனங்கள் தற்போது எளிதாக வந்து செல்ல முடிகிறது என பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.