உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் வறட்சியால் காயும் மரங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் வறட்சியால் காயும் மரங்கள்

வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுவதால் மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாகி வருகிறது. மழை பெய்தால் மட்டுமே சற்று பசுமைச் சூழல் உருவாகும் என்ற நிலை இருப்பதால் வருண பகவான் வருகையை வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் நிரம்பியது. இதனால் கூமப்பட்டி, வத்திராயிருப்பு, நெடுங்குளம், கான்சாபுரம், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பி பல ஆண்டுகளுக்குப் பிறகு சிவகாசி தாலுகா பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் நிலை உருவானது.ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மம்சாபுரத்தில் அனைத்து கண்மாய்களும் நிரம்பி மறுகால் விழுந்ததால், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியகுளம் உட்பட பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி சிவகாசி தாலுகா கண்மாய்களுக்கும் தண்ணீர் சென்றது.இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வனப்பகுதியில் செடி, கொடிகள், வறட்சி ஏற்பட்டு செடி, கொடிகள், மரங்கள் காய்ந்து சருகாகி காணப்படுகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள தோப்புகளுக்கு யானைகள், மான்கள் தண்ணீர் தேடி வருகின்றன.இருந்த போதிலும் மழை பெய்தால் மட்டுமே வனப்பகுதியில் பசுமை சூழல் உருவாகும் என்பதால் வருண பகவானை வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை