உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மொய் பணத்தை திருடிய இரு சகோதரிகள் கைது

மொய் பணத்தை திருடிய இரு சகோதரிகள் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார், கொத்தங்குளத்தைச் சேர்ந்த சமுத்திரகனி என்பவர் இல்ல திருமண விழா, ஜூலை 7ல், வன்னியம்பட்டி விலக்கில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. திருமண வீட்டார் மொய் பணம் வசூலித்து கொண்டிருந்த நிலையில், டிப் டாப்பாக வந்த இரு பெண்கள், மொய் பணம் வசூலித்தவரிடம், 500 ரூபாய்க்கு போட்டி போட்டு சில்லரை கேட்டனர்.மொய் வசூல் செய்தவர் குழப்பமடைந்த நிலையில், அவரது கவனத்தை திசை திருப்பி, 1.71 லட்ச ரூபாய் இருந்த பணப்பையை இருவரும் திருடி சென்றனர். அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் உடனடியாக வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதலில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா அயன் கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி முத்துச்செல்வி, 54, அவரது தங்கை அமாவாசை மனைவி பாண்டியம்மாள், 42, ஆகிய இருவரும் பணத்தை திருடியது தெரிந்தது. உசிலம்பட்டியில் இருந்து ஒரு வாடகை காரில் திருமண மண்டபத்திற்கு வந்து, மொய் பணத்தை திருடிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த, 1.71 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ