உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாழ்வாக செல்லும் மின் வயர்: அச்சத்தில் கிராமத்தினர்

தாழ்வாக செல்லும் மின் வயர்: அச்சத்தில் கிராமத்தினர்

நரிக்குடி;நரிக்குடி அருகே மின் வயர் தாழ்வாக செல்வதால் விபத்து அச்சம் இருப்பதையடுத்து மின் வயரை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.நரிக்குடி பூம்பிடாகை கிராமத்தில் ஊருக்குள் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் மின் வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதால் தொடும் தூரத்தில் உள்ளது. விபத்து அச்சத்தில் அக்கிராமத்தினர் அந்த வழியை கடந்து செல்கின்றனர். வாகனங்கள் சென்றால் மின் வயரில் உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பலமுறை மின்வாரியத்திற்கு புகார் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்திற்கு முன் தாழ்வாக இருக்கும் மின் வயரை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை