உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்திற்கு பொது, செலவின பார்வையாளர்கள் வருகை

மாவட்டத்திற்கு பொது, செலவின பார்வையாளர்கள் வருகை

விருதுநகர் : லோக்சபா தேர்தல் 2024ஐ முன்னிட்டு விருதுநகரில் நேற்று பொது பார்வையாளர், செலவின பார்வையாளர், ஒருங்கிணைந்த போலீஸ்துறை பார்வையாளர் ஆகியோர் வந்தனர்.விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நீலம் நம்தேவ் எக்கா 94899 85882, செலவின பார்வையாளராக ரதோஷியாம் ஜஜீ 94899 85880, ஆகியோரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த போலீஸ் துறை பார்வையாளராக ஸ்ரீஜித் 94899 85881 நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளருக்கு அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.gmail.comல் தெரிவிக்கலாம். பொது பார்வையாளரின் தொடர்பு அலுவலராக தாசில்தார் ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 70107 95006 என்ற எண்ணில் அழைக்கலாம். விருதுநகர் பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளரிடம் காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை புகார்களை நேரில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ