உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகரில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி நடந்த திருநங்கைகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை தேர்தல் அலுவலர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கருமாதி மடம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர்தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தில் பங்கு கொள்வீர் என்ற உறுதிமொழி பத்திரத்தை மாணவர்களுக்கு வழங்கினார் முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி