உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாப்பாடு தகராறு 3 பேர் காயம்

சாப்பாடு தகராறு 3 பேர் காயம்

சாத்துார்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக், 18. இவர் உறவினர் வீட்டு கிடா வெட்டு நிகழ்ச்சிக்காக இருக்கன்குடி வந்திருந்தார். விருந்து நடந்து கொண்டிருந்த போது இருக்கன்குடியை சேர்ந்த பாலமுருகன், மாரீஸ்வரன், ஊர்க்காவலன், சுந்தர்ராஜ், ஆகியோர் தங்களுக்கும் சாப்பாடு கேட்டு தகராறு செய்து அரிவாள் மனை, கரண்டியால் தாக்கினர். கார்த்திக், விக்கிரமாதித்தன், அமுல்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருக்கன்குடி போலீசார் பாலமுருகனை கைது செய்து மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை