| ADDED : ஜன 11, 2024 05:07 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கின் போது ஜன. 9 ல் 150 பேர், ஜன. 10 ல் 195 பேர் என 345 பேர் தற்காலிக ஓட்டுநர், நடத்துனராக பணி புரிந்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து 9 பணிமனைகளில் தொழிலாளர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.இந்நிலையில் மக்களுக்கான பஸ் சேவை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வேலை நிறுத்தம் துவங்கிய ஜன. 9 ல் 150 பேர் தற்காலிக ஓட்டுநர், நடத்துனராக பணிபுரிந்தனர். ஜன. 10 ல் 195 பேர் என 345 பேர் தற்காலிக ஓட்டுநராகவும், நடத்துனராகவும் பணிபுரிந்துள்ளனர்.இவர்களுக்கு நிரந்தர ஊழியர்கள் கூடுதல் பணி செய்தால் வழங்கக்கூடிய சம்பளம் ஓட்டுநருக்கு ரூ. 700, நடத்துனருக்கு ரூ. 690 என வழங்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் முதல் நாளை விட இரண்டாவது நாள் தற்காலிக ஊழியர்கள் அதிகமாக பணியமர்த்தப்பட்டனர்.