உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அறிவியல், இயற்கையை அறிய துாண்டும் ஆர்வம்

 அறிவியல், இயற்கையை அறிய துாண்டும் ஆர்வம்

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து 4வது புத்தகத்திருவிழா நடத்துகிறது. இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கிறது. நவ.24 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை பார்த்து வாங்கலாம். மேலும் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடக்கிறது. பார்வையாளர்கள் சொல்வது என்ன பெற்றோர் வழியில் பிள்ளைகள் பெற்றோர் புத்தகத்தை எடுத்து தொடர்ந்து படித்து வந்தால், அவர்களின் குழந்தைகளின் புத்தகம் வாசிப்பதை கற்றுக்கொண்டு பின் தொடர்வார்கள். இந்த பழக்கம் தொடர்ந்து ஏற்பட்டால் தமிழில் பிழை இல்லாமல் தொடர்ந்து படிக்கவும், எழுதவும் முடியும். காமராஜர் வரலாறு, கணக்குகள் தொடர்பான புத்தகங்களை வாங்கியுள்ளேன். - கீர்த்தனா, விருதுநகர் குழந்தைகள் அறிவு மேம்படும் குழந்தைகள் அதிக அளவில் அலைபேசியை உபயோகிக்கிறார்கள். எங்கள் வீட்டு குழந்தைகளின் அறிவு திறன் மேம்படுவதற்கான புத்தகங்களை தேடி வாங்கியுள்ளோம். மேலும் விளையாட்டு பொருட்களையும் வாங்கியுள்ளோம். குழந்தைகள் அதிக நேரம் அலைபேசி உபயோகிப்பதை தவிர்க்க புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம். -- சசிதா ஆனந்தவேல், விருதுநகர் அரசியலமைப்பு அறிவோம் அனைத்து வயதினரும் இந்திய நாட்டின் அரசியலமைப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த குற்றங்களுக்கு எந்த பிரிவில் வழக்குகள் பதியப்படுகிறது. அதற்கான தண்டனைகள் குறித்தும், விசாரணை முறை, நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு தொடர்பான வாதங்களை அறிந்து கொள்ள வேண்டும். -- ரமேஷ், விருதுநகர் ஆன்மிகம் வளர்க்கும் கண்காட்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை தினமும் படிக்க வேண்டும். தற்போது கண்காட்சியில் தேவராம், திருவாசகம் உள்பட தமிழ் நாவல்கள், ஐம்பெரும் காப்பியங்கள் தொடர்பான புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது. இதனை வாசிக்கும் போது நமக்கு நேர்மறை எண்ணங்கள், ஆற்றல்கள் தோன்றும். -- குமாரவேல், மதுரை

கவர்ந்த புத்தகங்கள்

மகா பெரியவா ஆசிரியர் : பி.சுவாமிநாதன் வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் விலை : ரூ.130 ஸ்ரீ ஆதி சங்கரரை தலைமை குருவாகவும், முதலாவது பீடாதிபதியாகவும் கொண்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆச்சார்யராக அலங்கரித்தவர் மகா பெரியவா. அவருடைய பக்தர்களின் அனுபவங்களை தொகுத்து, தனது பாணியில் எழுத்தாக்கியுள்ளார் நுால் ஆசிரியர். காஞ்சி மகானின் கருணை மழை அனைவரது இல்லங்களிலும் பொழிய வேண்டும் என்பதே இந்நுாலின் சிறப்பு. தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் ஆசிரியர் : இந்திரா சவுந்தர்ராஜன் வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் விலை : ரூ.370 மகாபாரதம் என்ற காவியத்தில் நமக்கு தெரிந்த பாத்திரங்கள் குறைவு. மேலும் கவுரவர்களில் நமக்கு அறிமுகமானவர்கள் துரியோதனனும், துச்சாதனனும் மட்டுமே. ஆனால் துரியோதனின் மற்ற 98 தம்பிகள், துச்சளை என்னும் தங்கை, அவளது கணவன் ஐயத்ரதன்... இன்னும் தொட்டுத் தொட்டு நுாற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் இந்த காவியத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பற்றி இந்நுால் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. தடம் மாறும் வயது ஆசிரியர் : ரவி பார்கவன் வெளியீடு : ஸ்ரீ ஆனந்த நிலையம் விலை : ரூ.200 மனித இனத்தின் பல தலைமுறைகளை உருவாக்கியவள் பெண். தற்போதைய மேம்பட்ட சமூகத்தில் பெண்ணிற்கு ஏற்படும் இடர்பாடுகள், மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றால் வாழ்வில் ஏற்படும் சங்கடமான சூழ்நிலையை எவ்வாறு கடந்து முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் நுால். கண்பேசும் வார்த்தைகள் ஆசிரியர் : நா.முத்துக்குமார் வெளியீடு : டிஸ்கவரி பதிப்பகம் விலை : ரூ.150 காதலும், காற்றும் அனுமதி கேட்டுவிட்டு வருவதில்லை. காற்று நுழைய முடியாத இடத்தில் கூட காதல் நுழைந்து விடும். இந்த காதல் குறித்தும், அதனால் ஏற்படும் நிகழ்வுகள், நினைவுகள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காவியம்.

தினமலர் சந்தா செலுத்தினால்

ரூ.1000 மதிப்பில்

புத்தகங்கள் இலவசம்

புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 33ல் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் சந்தா ஒன்று பலன் மூன்று சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால் ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சத்தில் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு, ரூ.5 லட்சத்தில் தனிநபர் விபத்து காப்பீடு, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கு ரூ.1 லட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ