உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் ரோட்டில் மேவிய மணலால் விபத்து அபாயம்

சாத்துாரில் ரோட்டில் மேவிய மணலால் விபத்து அபாயம்

சாத்துார்: சாத்துார்-சிவகாசி ரோட்டில் பரவியிருக்கும் புழுதி மணலால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. சாத்துார்-சிவகாசி ரோட்டில் வீரபாண்டியா புரம் விலக்கு, நான்கு வழிச்சாலை விலக்கு, மேட்டமலை ஊராட்சி குட்பட்ட பகுதியில் ரோட்டின் இருபுறமும் மணல் அதிகளவில் படிந்துள்ளது. சாத்துாரில் இருந்து சின்னக் காமன்பட்டி, அனுப்பங்குளம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் இரு சக்கர வாகனத்தில் ஆட்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரோட்டில் பாதி துாரம் வரை பரவி கிடக்கும் புழுதி மணல் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம் பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மேட்டமலையில் கல்லுாரி செல்லும் மாணவர்களும் மணலால் விபத்தில் சிக்குகின்றனர். தற்போது காற்று அதிக மாக வீசுவதால் புழுதி மண் மேலும் பரவி வருகிறது.கடந்த காலங்களில் சாலை பணியாளர்கள் மூலம் சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள முள் செடிகள், சாலை ஓரத்தில் தேங்கும் மணல், மழை நீரையும் தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் அகற்றி வந்தனர். தற்போதும் சாத்துார் - சிவகாசி ரோட்டில் பரவியுள்ள மண்ணை அகற்றி விபத்து ஏற்படுவதை தடுக்க நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை