உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் வயர்களுடன், கேபிள் வயர்களும் பிணைந்துள்ளதால் ஊழியர்கள் அவதி

மின் வயர்களுடன், கேபிள் வயர்களும் பிணைந்துள்ளதால் ஊழியர்கள் அவதி

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி பகுதிகளில் மின் வயர்களுடன் கேபிள் வயர்களும் இணைந்து செல்கிறது. இதனால் மின்தடை ஏற்படும் போது அதை சரிசெய்தவற்கான பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகரில் குடியிருப்பு பகுதிகள், பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பல வணிக வளாகங்கள், பலசரக்கு, துணிக்கடைகள், உணவகங்களுக்கு தேவையான மின்சாரம் மின்வயர்கள் மூலம் வழங்கப்படுகிறது.இதற்காக நகரின் பல இடங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பங்கள் அருகேயே இன்டர்நெட், கேபிள் வயர்கள் எடுத்துச்செல்வதற்காகவும் கம்பங்கள் அமைக்கப்பட்டது. மின்சாரத்தின் தேவை அதிகரிப்பால் மின் வயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதனால் மின் வயர்கள் மின்கம்பங்களில் சிலந்தி வலைகளை போல அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே செல்லும் கேபிள் வயர்களும் மின் வயர்களுடன் பிணைந்துள்ளது. நகரில் மின்தடை ஏற்படும் போது அதனை சரிசெய்வதற்காக மின் ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏறி முயற்சிக்கும் போது கேபிள் வயர்கள் இடையூறாக உள்ளது.ஏற்கனவே சிலந்தி வலை போல இருக்கும் மின்ஒயர்களில் பழுது ஏற்பட்டதை கண்டறிவதே சிரமமானதாக இருக்கும் நிலையில் கேபிள் வயர்களும் சிக்கியுள்ளதால் பணிகள் பாதிக்கப்படுவதாக ஊழியர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.மேலும் பணியின் போது கேபிள் வயர்கள் அறுந்து விழுவதால் சம்பந்தபட்ட நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறுகின்றனர். எனவே மின் வயர்கள் செல்லும் பாதையில் இடையூறு ஏற்பாடுத்தாதவாறு கேபிள் ஒயர்கள் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை