உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

விருதுநகர், :

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வை உளவியல் ரீதியாக ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது: பள்ளி மாணவர்கள் எது சரி, எது தவறு என்று ஆராயும் பகுத்தறிவு வயதுக்கு வரும் முன்பே பல்வேறு சூழல்களை சந்திக்கின்றனர். நண்பர்கள் குழுவில் பெரும்பாலானோர் செய்யும் தவறை செய்ய மறுக்கும் நண்பர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகிறது என்ற உளவியல் சார்ந்த சிக்கல்களை மாணவர்கள் சந்திக்கின்றனர். உன்னை பிடிக்காமல் போவதை எதிர் கொள்வதற்கான தைரியத்தை நீ வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதுகுறித்து தொடர்ச்சியாக எடுத்துக்கூறி நல்வழி படுத்த வேண்டும். ஓய்வு நேரங்களில் விளையாட்டு, மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகள் உள்ளிட்ட மகிழ்ச்சியை தரக்கூடிய பல்வேறு காரணிகள் குறித்து அறிமுகம் செய்து அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும், என்றார். அரசு, உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 225 உடற்கல்வி ஆசிரியர்கள், மனநல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ