உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் கல்லுாரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது

சிவகாசியில் கல்லுாரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் தங்கையை காதலித்த கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் வீரமாணிக்கம் 18. இவர் சாத்துார் அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரை தான் வசிக்கும் பகுதியின் கால்நடை மருந்தகம் அருகே நடந்து சென்ற போது மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரமாணிக்கம் உயிரிழந்தார். அவரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கட்டட வேலை செய்யும் 17 வயது சிறுவனை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், வீரமாணிக்கம் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு சிறுமியின் அண்ணன் உறவு முறையான 17 வயது சிறுவன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வீரமாணிக்கத்திற்கும், சிறுவனுக்கும் இடையே பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் சிறுவன் கத்தியால் குத்தியதில் வீரமாணிக்கம் உயிரிழந்தார். இச்சவம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை