உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர்; கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: 1330 குறட்பாக்களை மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் 2025--26ம் ஆண்டிற்கான குறள் பரிசு பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விண்ணப்பங்களை அக். 31க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.tn.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை