மேலும் செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
27-Sep-2024
சிவகாசி, : சிவகாசி அரசு கலை , அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் துாய்மை பாரதம் துாய்மையே சேவை என்னும் திட்டத்தின் கீழ் பாலீதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றைச் சேகரித்து ஆனையூர் ஊராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணி நடந்தது. ஆனையூர் ஊராட்சித் தலைவர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார். துாய்மைப் பணி ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப்பில் தொடங்கி அரசு கலை,அறிவியல் கல்லுாரி வரை நடந்தது. இதில் சுமார் 105 கிலோ பாலீதீன், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த 86 மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பொருளாதாரத் துறைத் தலைவர் வேல்முருகன் உடனிருந்தார். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கணேச முருகன் செய்தார்.
27-Sep-2024